கல்வி குறித்த அடிப்படை அறிவை பெற வேண்டுமானால் குழந்தைகள் தாய்மொழியில் கல்வியை துவக்குவது அவசியம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 6 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயிற்றுவிப்பது கட்டாயம் என ஆந்திர அரசு கடந்த நவம்பரில் உத்தரவு பிறப்பித்தது. அதை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே, இந்த கருத்தை வெளியிட்டார். துவக்க கல்வியை எந்த மொழியில் வழங்குவது என்பதில் பெரிய மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்ற அவர், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.