மிதமானது முதல் தீவிரமான கொரோனா நோயாளிகளில் இறப்பு விகிதத்தை குறைக்க எந்த வகையிலும் பிளாஸ்மா தெரபி பயன்படவில்லை என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
39 மருத்துவமனைகளில் 464 கொரோனா நோயாளிகளிடம் 350 மருத்துவர்கள் வாயிலாக ஐசிஎம்ஆர் நடத்திய பிளாஸ்மா தெரபி சிகிச்சை ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மிதமான அல்லது தீவிர தொற்றால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம், நோயின் தீவிரத்தன்மை அதிகரிப்பதையும் பிளாஸ்மா தெரபியால் குறைக்க இயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ இதழால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.