கேரள தங்க கடத்தல் வழக்கில் சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளிகளை துபாயில் கைது செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
பைசல் பரீது, ராபின்ஸ் ஹமீது ஆகியோரே இவர்கள் என என்ஐஏ தெரிவித்துள்ளது.
தங்க கடத்தல் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 6 பேரை பிடிக்க இன்டர்போலின் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
அதில் பைசல் பரீதும், ராபின்ஸ் ஹமீதும் சிக்கியதாகவும், எஞ்சியவர்கள் விரைவில் கைதாவர்கள் என்றும் என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.