மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடி மற்றும் பெங்களூரு,மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டாலும் சிறப்பு ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நெல்லையில் இருந்து வாரம் இருமுறை குஜராத் மாநிலம் ஹாப்பாவிற்கு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறுபடியும் இயக்க மேற்கு ரெயில்வே அனுமதி வழங்கியுள்ளது.