போதை மருந்து கும்பல் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறப்படும் விவகாரத்தில், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு கம்மனஹள்ளியில் உணவகம் நடத்தும் முகம்மது அனூப் என்பவர் உள்ளிட்ட 3 பேரை போதைமருந்து தடுப்பு பிரிவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். அனூப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து, பெங்களூரு சாந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பினீஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கேரள தங்க கடத்தல் வழக்கிலும், பினீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.