1977 ஆம் ஆண்டு தனது பாட்டி இந்திரா காந்தியை சீக்கியர்கள் தான் பாதுகாத்தனர் என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் போராட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மக்களிடம் இருந்து தான் ஏராளமானவற்றை கற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்.
1977ஆம் ஆண்டு தேர்தலில் தனது பாட்டி இந்திரா காந்தி தோற்ற போது வீட்டில் யாரும் உடன் இல்லை என்று அவர் நினைவு கூர்ந்தார். அப்போது சீக்கியர்கள் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர் என்றும் குறிபிட்டார். பஞ்சாப் மக்களுக்கு தான் கடன் பட்டுள்ளதாக உணர்வதாகவும் ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.