பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் முடிவுக்கு வருவது மிகவும் கடினம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.
சுசாந்தின் மரணம் கொலையாக இருக்க வாய்ப்பில்லை என எய்ம்ஸ் குழுவினர் சிபிஐ யிடம் தெரிவித்துள்ள நிலையில், டாக்டர் சுதிர் குப்தாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே எய்ம்ஸ் குழுவினர் தங்களது அறிக்கையை சிபிஐயிடம் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் ஒரு தடயவியில் விசாரணை தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.