புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் சாரம்சங்கள், மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்களை உயர்கல்வித் துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24 ஆம் தேதி இணைய வழியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அறிக்கையாக தொகுத்து தலைமை செயலர் மூலமாக மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில், பெரும்பாலானவர்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.