புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தமிழகத்தோடு இணைக்க மத்தியில் ஆளும் பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதை முறியடிக்க, பா.ஜ.க.வை புதுச்சேரியை விட்டே விரட்ட அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் தமது அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து தடுப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.