டிராக்டரில் சோபாவில் அமர்ந்து செல்லும் ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் திட்டங்களை எதிர்த்து நடக்கும் டிராக்டர் பேரணியில் பங்கேற்ற ராகுல் குறித்து பேசிய ஸ்மிரிதி இரானி, ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அவரை போன்ற வி.ஐ.பி. விவசாயிகளால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிக்கு வரும் ராகுலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.