உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த ஆம் ஆத்மி கட்சி பிரதிநிதிகள் மீது சாயம் வீசிய நபரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.
அவர்கள் அங்கு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் சாயம் வீசி விட்டு தப்பியோட முயன்றார்.
அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை விடுவித்து அழைத்து சென்றனர்.