டிராக்டரில் குசன் சோபாக்களில் அமர்ந்து ராகுல் காந்தி பேரணி செல்வதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபில் 3 நாள் டிராக்டர் பேரணியை ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
டிராக்டரில் முன்பகுதியில் அமர்ந்து பேரணியாக அவர் சென்று வருகிறார். இதில் குசன் சோபா இருக்கையில் ராகுல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு புரி விமர்சித்துள்ளார்.
குசன் சோபாக்களில் அமர்ந்து செல்வது போராட்டமில்லை எனவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதற்காக போராட்ட சுற்றுலா நடத்தப்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.