சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தி வரும் சிபிஐ, 50 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை கைப்பற்றியுள்ளது.
கர்நாடக அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், டி.கே.சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, அவரது வீடு, அவரது தம்பியும் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் வீடு உள்ளிட்ட 14 இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறது.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 50 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பட்டுவாடா செய்வதற்கு வைத்திருந்த பணமா? என சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சிபிஐ ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது