ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.