லடாக் எல்லையில் சீனாவை எதிர்கொள்ள ராணுவமும் விமானப்படையும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உள்ளன.
லே விமானப் படைத்தளத்தில் விமானப்படையின் சி 17, சி 130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் சீன ராணுவத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டிருக்கும் முன்வரிசை ராணுவத்திற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
ராணுவத்தின் தேவைகளை நிறைவேற்றும்படி விமானப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவுடன் எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானையும் எதிர்கொள்ள இந்திய ராணுவத்துடன் விமானப்படை கைகோர்த்துள்ளது.