அருணாச்சலப் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தாக்கியதில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜெய்ராம்புர் எனுமிடத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்குரிய ஒரு தண்ணீர் டேங்கர் லாரியின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் தொடுத்தனர்.
அப்போது நடைபெற்ற மோதலில் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒரு வீரர் காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை