சுஷாந்த் சிங் வழக்கில் போதைத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியை மேலும் துன்புறுத்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரியா மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டு அவர் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியிருப்பதாக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
ஏய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர்கள் குழு சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை என்று உறுதி செய்துள்ளது.
இதனால் சுஷாந்த்தை கொல்ல ரியா சதி செய்ததாக சாத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு வலுவிழந்துவிட்டதாகவும் அதீர் ரஞ்சன் சவுத்திரி குறிப்பிட்டுள்ளார்.