மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக ராம்விலாஸ் பஸ்வான் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனரும் ஆவார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஸ்வானுக்கு நேற்றிரவு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதன் பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தன.