பீகார் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சிராக் பாஸ்வான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.
நிதிஷ்குமாருடன் கூட்டணி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு கூட்டணிக் கட்சிகளும் இருவேறு நிலைப்பாடுகள் எடுத்துள்ளன.
தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் பீகாரில் தொகுதி பங்கீடு போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.