வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் இடைத்தரகர்களின் தரகர்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்துள்ளார்.
கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதுள்ள சூழலில் விவசாயிகள் விளைபொருட்களுக்குக் குறைந்த விலையைப் பெறுவதாகவும், நுகர்வோர் நுகர்பொருட்களுக்கு அதிக விலையைக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சூழலுக்கு இடைத்தரகர்களே காரணம் என்றும், புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.