லடாக் பகுதிக்கு ஆண்டு முழுவதும் சென்று வரும் வகையில் சிங்கு லா என்னுமிடத்தில் குகைவழிப்பாதை அமைக்க எல்லைச் சாலைகள் அமைப்பைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இமாச்சலத்தின் மணாலி - லே நெடுஞ்சாலையில் ரோத்தங் கணவாய்க்குக் கீழே மலையைக் குடைந்து 9 கிலோமீட்டர் நீளத்துக்குக் குகைப்பாதை அமைத்தது எல்லைச் சாலைகள் அமைப்பின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.
அந்தக் குகைப்பாதையின் திறப்பு விழாவிலேயே சிங்கு லாவில் குகைப்பாதை அமைத்து எந்தக் காலநிலையிலும் லடாக் பகுதிக்குச் செல்ல வகை செய்ய வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக எல்லைச் சாலைகள் அமைப்பின் தலைவர் ஹர்பால் சிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.