வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யகூடும்.
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்லவேண்டாம் என்றும், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.