லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காண்பது குறித்து வரும் 12ம் தேதி, ராணுவ கமாண்டர்கள் நிலையில் இந்தியாவும் சீனாவும் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளன.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலை அடுத்து இருதரப்பும் அங்கு வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இந்த பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் இதுவரை 6 கட்டங்களாக, ராணுவ கமாண்டர்கள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இருப்பினும் லடாக் எல்லையில் பதற்றம் இன்னும் தணியாமல் உள்ளன.
இந்நிலையில் லடாக்கின் கிழக்கு பகுதியில் 12ம் தேதி இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.