டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் வீட்டில் தேங்கிய தண்ணீரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றிய படக்காட்சி வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக 10 வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணிக்குப் பத்து நிமிடங்கள் ஒதுக்கித் தேங்கிய நீரை அகற்ற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவர் வீட்டில் பூஞ்சாடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை வாளியில் கவிழ்த்துவிட்டுப் புதிதாகத் தண்ணீர் ஊற்றி வைத்த காட்சியைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.