உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் குடும்பத்தினரின் வாக்குமூலத்தை சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநில அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மாநில அரசு நேற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , துணை கண்காணிப்பாளர், மற்றும் சில காவல்துறை அதிகாரிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு, இளம்பெண்ணின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்து வாக்குமூலத்தை பதிவு செய்தது.