ரயில்வே ஐஆர்சிடிசி சேவைகளில் இந்தி திணிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அரசியலமைப்பில் 20க்கும் மேற்பட்ட மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணச்சீட்டு பதிவு செய்யும் போது இந்தி திணிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்தி பேசாத மக்களும் ஐஆர்சிடிசி தளத்தை பயன்படுத்தும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ள அவர், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதியளித்து விட்டு, நயவஞ்சகமான வழிகளில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாகவும், இவ்வாறு இந்தி பேசாத மக்களை வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.