ரயில் நிலைய உணவகங்களில் பார்சல் உணவுகளை விற்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
ஒப்பந்தம் முடிவுற்றதால் செப்டம்பர் 30-ந் தேதி வரையில் 10 சதவீத உரிம கட்டணத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட ரயில் நிலைய உணவு பிளாசாக்கள், துரித உணவு பிரிவுகள், உணவகங்கள், வரும் 31-ந் தேதிவரை 20 சதவீத உரிம கட்டணத்துடன் இயங்குவதற்கு ரயில்வே மண்டலங்கள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமைக்கப்பட்ட உணவுகளை பார்சல்களாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் அமைந்துள்ள உணவகங்களில், கடைகளில், ஸ்டால்களில் பயணிகள் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.