நிரவ் மோடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையின் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
மும்பையில் பிராடி ஹவுசில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர்13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு கட்டாமல் மோசடி செய்தனர்.
இந்த மோசடிக்கு வங்கிக்கிளையில் துணை மேலாளராக பணியாற்றி வந்த கோகுல்நாத் ஷெட்டி உதவியதும், குமாஸ்தாவாக பணியாற்றி வரும் அவருடைய மனைவி ஆஷா லதாவும் உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வருமானத்தை மீறி 2 கோடியே 63 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. தனியாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.