இந்திய ரயில்வேயின் அதிநவீன தொழில்நட்ப வசதிகளுடன் கூடிய தேஜாஸ் ரயில் எஞ்சின் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
சித்தரஞ்சன் லோகமோட்டிவ் பணிமனை இதன் முதல் மாதிரியை அறிமுகம் செய்துள்ளது. அதிகாரிகள் தேங்காய் உடைத்து முதல் தேஜாஸ் எஞ்சினை இயக்கினர்.
இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது. விரைவில் முக்கிய விரைவு ரயில்களுக்கு இந்த எஞ்சின் பொருத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.