ஹத்ராசில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டு உயிரிழந்த வழக்கை உத்தரபிரதேச மாநில அரசு கையாளும் விதத்தை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உத்தர பிரதேச அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பீம் ஆர்மி கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத், மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண், காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், இடதுசாரி கட்சியினர், மாணவர் அமைப்பினர், எம்எல்ஏக்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.