பீகார் தேர்தலில் கேட்கும் தொகுதிகளை தராவிட்டால் தனித்து நின்று போட்டியிடப்போவதாக லாலு பிரசாத்தின் ஆர்ஜேடிக்கு காங்கிரஸ் கட்சி கெடு விதித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்த ஆர்ஜேடி, சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை மட்டுமே ஒதுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதை ஏற்க முடியாது என பீகாருக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் ஜிதன்ராம் மஞ்சியின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆர்ஜேடி முகாமை காலி செய்து விட்டன.
243 இடங்கள் உள்ள பீகார் சட்டமன்றத்திற்கு இந்தமாதம் 28 ஆம் தேதியும், அடுத்த மாதம் 3, 7 ஆம் தேதிகளிலும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.