கம்போடியாவிற்கான அடுத்த இந்திய தூதராக தேவயானி உத்தம் கோப்ரகடே நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரியான தேவயானி, இதுவரை பாகிஸ்தான், ஜெர்மன், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்திய தூதரகத்தில் பணியாற்றியுள்ளார். 2013ம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் அளித்ததாக, அமெரிக்காவில் தேவயானி கைது செய்யபப்ட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது, டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றும் தேவயானி, விரைவில் கம்போடியாவில் தனது பணியை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.