பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் , சுக்பிர் சிங் பாதல் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
31 விவசாய அமைப்புகள் சார்பில் பஞ்சாபில் போராட்டம் நடத்தப்பட்டது. சண்டிகரில் சுக்பிர் சிங் பாதல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பாய்ச்சியும் கூட்டத்தை விரட்டியதால் பரபரப்பு நிலவியது.
இதனிடையே விவசாயிகள் பேரணியுடன் சண்டிகரில் நுழைந்த ஹர்சிம்ரத் கவுர் கைது செய்யப்பட்டார். சண்டிகரில் சுக்பீர் பாதலையும் போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.