ஐநா.சபையின் நான்காவது உலக மகளிர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி இந்தியாவில் வளர்ச்சிக்குப் பெண்கள் தலைமை ஏற்றுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பெண் சமத்துவம், பெண்களுக்கான வளர்ச்சி குறித்து திட்டமிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட் காலத்தில் பெண்களைப் பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார். பெண்களுக்கு சட்டஉதவி, மருத்துவ உதவி, பாதுகாப்பு, காவல்துறை உதவி போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.