சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 5ம் தேதி காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பொறுப்பு செயற்கை நுண்ணறிவு, தரவு, ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அதிகப்படியான நேர்மறை வாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆகிய 5 பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சி, கொள்கை மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.