வெள்ளி கோளுக்கு விண்கலம் ஏவும் 'இஸ்ரோ' திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனமான சி.என்.இ.எஸ். வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வீனஸ் எனப்படும் வெள்ளி கோளுக்கு 2025ல் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கான கருவிகளை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ராஸ்காஸ்மோஸ்' மற்றும் பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பும் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவனுடன் சி.என்.இ.எஸ். தலைவர் ஜீனா யீவ்ஸ் லீ கால் விரிவான பேச்சு நடத்தியதாகவும், முதல் முறையாக பிரான்சின் விண்கலம் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.