மேக் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னைக்கு அருகில் தயாராகும், க்ளோக் பிஸ்டல்ஸ் எனப்படும் கைத்துப்பாக்கிகள், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், தனிநபர்களுக்கான விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபலமான ஆஸ்திரியாவின் க்ளோக் துப்பாக்கித் தயாரிப்பு நிறுவனத்துடன், இணைந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த CMT என்ற நிறுவனம், குறுகிய எல்லை முதல், சற்று தொலைவிலான இலக்கை மிகச்சரியாகவும், இலகுவான முறையிலும் சுடக்கூடிய, க்ளோக் கைத்துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய கடந்தாண்டு ஒப்பந்தம் செய்தது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், CMT நிறுவனம் துப்பாக்கி உற்பத்தி தொழிலகத்தை அமைத்திருக்கிறது.
முதற்கட்டமாக, இராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசின் பாதுகாப்புப் படைகளுக்கு க்ளோக் பிஸ்டல்கள் வழங்கப்படும் என CMT நிறுவனம் கூறியிருக்கிறது.