தேர்தல் கூட்டணி வைக்க, காங்கிரஸ், தகுதியான கட்சி அல்ல என்று, மதச் சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் கட்சி கடைபிடிப்பதே இல்லை என்று குற்றம்சாட்டிய அவர், இனிவருங்காலங்களில், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு, நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில், எந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எதிர்வினையாற்றியிருக்கிறார்