மேற்கு வங்கத்தில் பெரிய அளவிலான மீனை பிடித்த வயதான ஏழை பெண் ஒருவர், ஒரே நாளில் லட்சாதிபதியாகி விட்டார்.
சாகர் தீவை சேர்ந்த புஷ்பாகர் என்ற பெண், போலா என்ற பெயரில் வங்காள மொழியில் அழைக்கப்படும் 52 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் ஆற்றில் இருந்து பிடித்துள்ளார்.
பெரும்பாடுபட்டு அதனை கரைக்கு கொண்டு வந்துள்ளார்.
ஒரு கிலோ 6 ஆயிரத்து 200 ரூபாய்க்கு அந்த மீன் விலை போனதால் 3 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்தது.
இவ்வளவு பெரிய மீனை தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்றும் அந்த பெண் மலைப்பாக தெரிவித்தார்.
படகு மோதியதில் அந்த மீன் இறந்திருக்கலாம் என்றும் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர்