செப்டம்பர் மாதத்தில் சரக்கு சேவை வரி மூலம் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு சேவை வரி மூலம் மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாய் சரக்கு சேவை வரி வருவாயாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கிடைத்ததை விட இது 4 விழுக்காடு அதிகம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மொத்த வரி வருவாயில் 17ஆயிரத்து 741 கோடி ரூபாய் மத்திய அரசுக்கானது என்றும், 23 ஆயிரத்து 131 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கானது என்றும், 47 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி என்றும் குறிப்பிட்டுள்ளது.