ஊரடங்கு காலகட்டத்தில், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வரை பயணம் செய்வதற்காக, முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகளுக்கான முழு பயணக் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரவாசி சட்ட மையம், விமானப் பயணிகள் சங்கம் ஆகியன தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டணத்தை திரும்பச் செலுத்தாமல், பயணிகளின் பெயர்களில் கிரெடிட் ஷெல்களை ஏற்படுத்தி, அதில் கட்டணத்தை இருப்பு வைக்கவும் விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
இந்த தொகையை, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பயணிகள் பயணக்கட்டணமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.