சின்டெக்ஸ் நிறுவனம் கடனாக வாங்கிய ஆயிரத்து 203 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாகப் பஞ்சாப் நேசனல் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கி செபியில் கொடுத்துள்ள அறிக்கையில், அகமதாபாத் கிளையில் இருந்து சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்ற கடன் ஆயிரத்து 203 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக் கால நீட்டிப்புக் கோரியது கடந்த ஆண்டு டிசம்பரில் நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த வாராக்கடனுக்காக 215 கோடியே 21 லட்ச ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.