மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே, Kurkumbh MIDC தொழிற்பேட்டை பகுதியில், ரசாயனத் தொழிற்சாலை ஒன்றில், அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து நேரிட்டபோது தொழிற்சாலையில் ஊழியர்கள் 10 பேர் இருந்துள்ளனர்.
தீ பெருமளவு பரவும் முன்னர் 10 பேரும் தொழிற்சாலையில் இருந்து தப்பிவிட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.