மதுராவில் உள்ள கிருஷ்ணஜென்ம பூமியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் மசூதியை அகற்றகோரும் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயிலின் அருகே ஷாஹி இட்கா என்ற மசூதி உள்ளது.
இந்த மசூதி கோயிலுக்குச் சொந்தமான 13 புள்ளி 37 ஏக்கர் வளாகத்திற்குள், கிருஷ்ணரின் பிறப்பிடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மசூதியை அகற்ற வேண்டும் என ஸ்ரீகிருஷ்ணா விராஜ்மான் அமைப்பினர் மதுரா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது மதுரா நீதிமன்ற நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.