கொரோனா தொற்று காரணமாக இதுவரை 58 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 234 சிஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று குணமடைந்துள்ளதாகவும், 82 பேருக்கு புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 11 ஆயிரத்து 072 பேருக்கு தொற்று இருந்ததாகவும், அதில் 9 ஆயித்து 416 பேர் குணமடைந்துள்ளதாகவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மிசோரமில் இதுவரை 410 பிஎஸ்எஃப் வீரர்கள், 206 அசாம் ரைபிள்ஸ் பிரிவினர், 18 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் 21 ராணுவத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.