பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்தாண்டே ஓய்வுபெற வேண்டிய நிலையில், பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, வழக்கை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறார்.
இந்த வழக்கை, கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார்.
நீதிபதியின் வயது 60 ஆனதால், கடந்தாண்டே அவர், ஓய்வுபெறும் சூழல் உருவானது.
இருப்பினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், உச்சநீதிமன்றம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீதிபதி எஸ்.கே.யாதவின் பதவிக்காலத்தை, நீட்டித்து உத்தரவிட்டது.
இதன்படி, பதவிநீட்டிப்பு பெற்ற நீதிபதி எஸ்.கே.யாதவ், நாள்தோறும் விசாரணை அடிப்படையில், வழக்கை விசாரித்து, 2000 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை அளித்திருக்கிறார்.