தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சானிக் (extended range BrahMos supersonic cruise missile) ஏவுகணை 2ஆவது முறையாக வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தூரம் பறந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டதாகும்.
தற்போது அதை 400 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையான டிஆர்டிஓ (DRDO) அதிகரித்துள்ளது.
அந்த ஏவுகணையை 2ஆவது முறையாக ஓடிசாவில் இன்று டிஆர்டிஏ விஞ்ஞானிகள் பரிசோதனை நடத்தினர். நீர்மூழ்கிகள், கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையிலுள்ள ஏவுதளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவி தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.