ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக்கூடம் திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காணொலி காட்சி வழியே பேசிய அவர், அக்டோபர் 5ந்தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பது என முன்பு முடிவு செய்யப்பட்டு இருந்தது என்றார். எனினும், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளிக்கூடங்கள் திறப்பது வருகிற நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.