சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் மாலத்தீவுக்கு டார்னியர் விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது.
மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த விமானத்திற்கான செலவுகளை இந்தியாவே ஏற்கவுள்ளது.
மேலும் இந்திய பெருங்கடலின் சிறப்பு பொருளாதார பிராந்தியத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவின் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இந்த விமானம் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விமானத்தை இயக்குவதற்காக மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த விமானி, பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு இந்திய கடற்படை பயிற்சியும் அளித்துள்ளது.
இருநாட்டு அரசுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் டார்னியர் விமானத்தை இந்தியா மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது.