குழந்தைகள் பயன்படுத்தும் டயபரில் நச்சு ரசாயனம் கலந்து இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த டாக்சிக்ஸ் லிங்க் என்ற நிறுவனம் 20 டயபர் மாதிரிகளில் நடத்திய ஆய்வில், பிதலேட் (phthalate) என்ற நச்சு ரசாயனம் குழந்தைகளின் டயபரில் 2.36 பிபிஎம் முதல் 302 பிபிஎம் வரை இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த ரசாயனம் குழந்தைகளின் உடலுக்குள் சென்று நீரிழிவு, உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் செய்ய பயன்படுத்தப்படும் அந்த ரசாயனத்தைப் பயன்படுத்த தென்கொரியா, ஜப்பான் போன்ற பல நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை என்று டாக்சிக்ஸ் லிங்க் என்ற ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.